புதுக்கடை, பிப்- 18
புதுக்கடை அருகே மேலங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (39). இவர் சவுதி அரேபியாவில் கொத்தனார் வேலை செய்து வந்தார். தற்போது ஊரில் இருந்து வந்தார். இவருக்கு கடன் பிரச்சனை இருந்துள்ளது. இதன் காரணமாக ராஜனுக்கும் மனைவி ஷாமினிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் 14-ம் தேதி இரவு மனவருத்தத்தில் வீட்டில் இருந்த ராஜன் களைக் கொல்லி பூச்சி மருந்தை குடித்து ஆபத்தான நிலையில் கிடந்தார். உடனடி உறவினர்கள் வெள்ளையம்பலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுவிட்டு, மேல் சிசிட்சைக்காக திருவனந்தபுரம் தனியார் ஆஸ்பத் வரியில் சிகிட்சைக்கு சேர்த்தனர்.
அங்கு சிகிட்சை பலனின்றி நேற்று ராஜன் உயிரிழந்தார். இது தொடர்பாக ஷாமினி அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.