கிருஷ்ணகிரி அருகே போத்தி நாயனப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளி ஆண்டு விழா
கிருஷ்ணகிரி, பிப்.22- கிருஷ்ணகிரி மாவட்டம் போத்தி நாயனப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா பள்ளி தலைமை ஆசிரியர் எம்.எஸ்.மனோகர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தமிழாசிரியர் ஆனந்த லட்சுமி வரவேற்புரையாற்றினார், தலைமை ஆசிரியர் எம்.எஸ். மனோகர் ஆண்டு அறிக்கை வாசித்தார்.இதைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் மாணவ மாணவிகளுக்கு நடைபெற்றது. கல்வியியல் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கும், 100 சதவீதம் வருகை புரிந்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக மாநில நுகர்வோர் சங்க பாதுகாப்பு பொதுச் செயலாளர் டாக்டர். சந்திரமோகன், பத்திரிகை ஆசிரியர் மூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர், எஸ்.எம்.சி.தலைவி மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினர் பாராட்டினர். பள்ளியின் பட்டதாரி ஆசிரியர்கள் பாலாஜி, திவாகரன், சியாமள, சுமித்ரா,செல்வராஜ், ஆஷா, எழில் மொழி, சாந்தி, செந்தமிழ் செல்வி, பாக்கியலட்சுமி, சுந்தரம் ஏஞ்சலின் மேரி, பீடி சுரேஷ்குமார், உமா மகேஸ்வரி மற்றும் ஊர் பொதுமக்கள் பெற்றோர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக பட்டதாரி ஆசிரியர் பாலாஜி நன்றி கூறினார்.