அரியலூர், அக்;06
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் ,ஆனந்தவாடி அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் 28. 9 .2024 முதல் 4. 10. 2024 வரை சின்ன ஆனந்தவாடி கிராமத்தில் நடைபெற்றது. சிறப்பு முகாமில் பெருமாள் கோயில் உழவாரப்பணி, மரக்கன்றுகள் நடுதல்,பள்ளி வளாகத் தூய்மை மற்றும் போதை பொருள் ஒழிப்பு பேரணி நடத்தப்பட்டது. நிறைவு விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆ.முத்துக்குமரன் தலைமை தாங்கினார் ,பள்ளி PTA தலைவர் நல்லதம்பி SMC தலைவர் ரேணுகா ,SMC துணை தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் . நாட்டு நலப்பணித் திட்ட அரியலூர் மாவட்ட தொடர்பு அலுவலர் கி செல்லபாண்டியன் சிறப்புரையாற்றினார். இறுதியாக ஆனந்தவாடி அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அ.சத்தியராஜ் நன்றி உரை நல்கினார்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்