சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு.
உயிர்மருத்துவ அறிவியல் துறை நடத்திய தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் துறைத்தலைவர் முனைவர். இலங்கேஸ்வரன் வரவேற்புரையாற்றினார் .அதனைத்
தொடர்ந்து அழகப்பா பல்கலைகழகத்தின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர் பேராசிரியர். சேகர் கருத்தரங்கத்தை துவங்கி வைத்தார்.கேஎம்சி. மருத்துவமனையின் துணை நிறுவனர் மருத்துவர் காமாட்சி சந்திரன் புற்றுநோய் குறித்து சிறப்புரை வழங்கினார்
மேலும், இந்நிகழ்வில் அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் மூலக்கூறு புற்றுநோய்யியல் துறையின் தலைவர் முனைவர் சபிதா ராமநாதன் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
அழகப்பா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் அ. செந்தில்ராஜன் , ஆட்சிமன்ற குழு உறுப்பினர் பேராசிரியர்.
ராஜாராம் கருத்தரங்கின் நிறைவு விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.