திண்டுக்கல் தாடிக்கொம்பு வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேசிய தர உறுதி நிர்ணய சான்றிதழ்.
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேசிய தர உறுதி நிர்ணய சான்றிதழ் வழங்கப்பட்டது. சென்னையில் நடந்த இதற்கான விழாவில் சான்றிதழினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். தாடிக்கொம்பு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சீனிவாசன் மற்றும் செவிலியர் ஜெஸ்ஸி ஆகியோர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடம் இருந்து இந்த சான்றிதழை பெற்றுக் கொண்டனர். தேசிய தர உறுதி நிர்ணய சான்றிதழ் பெற்ற தாடிக்கொம்பு வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை திண்டுக்கல் சுகாதார மாவட்டம், மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர். செல்வகுமார் வாழ்த்தினார். தேசிய தர உறுதி நிர்ணய சான்றிதழ் வழங்குவதற்கான மதிப்பீட்டில் தாடிக்கொம்பு வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 92.7 விழுக்காடு மதிப்பெண் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.