நாகர்கோவில் அக் 9
தேசிய அஞ்சல் வார விழாவானது இந்திய அஞ்சல் துறையால் அக்டோபர் மாதம் 07 முதல் 11 வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அக்டோபர் 8 ஆம் தேதி தபால் தலை சேகரிப்பு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தின் சார்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டடம், நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை தபால் நிலையம் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு தபால் தலை கண்காட்சியை கன்னியாகுமரி கோட்ட
அஞ்சலக கண்காணிப்பாளர் க. செந்தில் குமார் தொடங்கி வைத்து சிறப்பித்தார். இதில் தபால் தலை சேகரிப்பாளர்கள் பலரின் அரிய வகை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தபால் தலைகள் கண்காட்சிப்படுத்தப்பட்டன. இக்கண்காட்சியிலும், இதனை சார்ந்த தபால் தலை சிறப்பு கருத்தரங்கு மற்றும் வினாடி வினா நிகழ்ச்சியிலும் ஏராளமான பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு பயனடைந்தனர்.