மதுரை அக்டோபர் 1,
மதுரையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் மாவட்ட அளவிலான தேசிய ஊட்டச்சத்து மாத விழாவில் ஊட்டசத்து தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சியை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தொடங்கி வைத்து பார்வையிட்டு ஊட்டச்சத்து பெட்டகத்தை குழந்தைகளுக்கு வழங்கினார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் ம.ஷீலா சுந்தரி உடன் உள்ளார்.