ஈரோடு 21
கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியில் டிஆர்டிஓ நிதியுதவியுடன் பாதுகாப்பு துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில்நுட்பத்தில் நானோ மெட்டீரியல்களின் உபயோகங்கள் குறித்து தேசிய அளவிலான கருத்தரங்கம் இயந்திரவியல் துறை மூலம் கல்லூரி கலை அரங்கில்நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக பட்னாக்கர் விருது பெற்ற சயின்டியிஸ்ட்(எப்), டிஆர்டிஓ வின் துணை இயக்குனர், தொழிற்பிரிவு கல்வி மையம், பாரதியார் பல்கலைக்கழகம் முனைவர் கதிர் வேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவரது உரையில் பாதுகாப்பு துறையில் நானோ கட்டமைக்கப்பட்ட பொருட்களின் பயன்பாடுகள் மற்றும் அதன் தனி சிறப்பம்சங்களைப் பற்றி எடுத்துரைத்தார். மேலும் மாணாக்கர்கள் தங்களுடைய ஆய்வுகளை டிஆர்டிஓ ஆய்வகத்தில் மேற்கொள்வதற்கு தேவையான வசதிகள் பற்றியும் டிஆர்டிஓ வின் வேலைவாய்ப்புகள் பற்றியும் விளக்கினார்.
கருத்தரங்கில் சிறப்பு பேச்சாளர் மூத்த இணைப் பேராசிரியர் முனைவர் கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு பேசுகையில் நானோ கட்டமைக்கப்பட்ட பொருட்களை தயாரிப்பது பற்றியும் அதனுடைய முக்கிய பயன்பாடுகள் குறித்தும் மாணவர்களிடையே விளக்கி கூறினார் கருத்தரங்கில் மற்ற கல்லூரிகளை சார்ந்த 70 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இறுதியாக பங்குபெற்ற மாணாக்கர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக கல்லூரியின் முதல்வர் முனைவர் தங்கவேல் தலைமை தாங்கினார் டீன் முனைவர் அருண்ராஜா, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் . இயந்திரவியல் துறையின் உதவிப்பேராசிரியர் நிர்மல் குமார் ஆகியோர் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.