தஞ்சாவூர். எப்ரல்.23
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டு ள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் இது நாள் வரை மொத்தம் 33 ஆயிரத்து 410 நபர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதில் 33 ஆயிரத்து 27பயனாளிகளுக்கு, (98 சதவீதம்) தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டு ள்ளது. 7,163 பயனாளிகளுக்கு, மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவி தொகையும், கடுமையாக கை, கால் பாதிக்கப்பட் டோருக்கான பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 962 பயனாளிகள், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட 199 நபர் களுக்கும், தொழுநோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 314 பேருக்கு பராமரிப்பு உதவி தொகை யும், முதுகு தண்டுவடம் பாதிக்கப் பட்டோருக்கான பராமரிப்பு உதவி தொகை திட்டத்தின் கீழ் 70 நபர் களும் பயனடைந்து வருகின்றனர். சமூக தரவு கணக்கெடுப்பு மூலம் 3 ஆயிரம் புதிய மாற்றுத்திறனாளி கள் கணக்கெடுக்கப்பட்டு முகாம் கள் மூலம் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.