கன்னியாகுமரி,ஜூன்.10-
மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவி ஏற்றார்.இதை கொண்டாடும் விதமாக தென்தாமரைகுளம் அடுத்த கோம்பவிளையில் பா.ஜ.வினர் பட்டாசு வெடித்து,இனிப்பு வழங்கினர்.நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார்.ராஜ்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தென்தாமரைகுளம் பேரூராட்சி பா.ஜ., கவுன்சிலர் சுபாஷ் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் பா.ஜ.க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்