கன்னியாகுமரி ஜன 10
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் ;
அறிவுத் தளங்களில் தமிழர்கள் தலைமைப் பொறுப்பு பெறும் நிகழ்வுகள் எப்போதுமே நமக்கு பெருமிதம் தரக்கூடியவை தான்.
இந்நிலையில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் புதிய தலைவராக கன்னியாகுமரி மண்ணின் மைந்தரான வி.நாராயணன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் செய்தி தமிழராகவும், குமரியின் மகளாகவும் மிகுந்த பெருமிதமும் மகிழ்வையும் தருகிறது.
ஏற்கனவே குமரி மாவட்டத்தை சார்ந்த சிவன் இஸ்ரோவின் தலைமை பொறுப்பில் இருந்த நிலையில் மீண்டும் ஒரு குமரி மண்ணின் மகன் அந்த பொறுப்பை அலங்கரித்திருக்கும் இந்த நிகழ்வு, படிக்கும் நம் பிள்ளைகளுக்கும் இளையோருக்கும் மிகுந்த உற்சாகத்தையும் உத்வேகத்தையும் தரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.புதிதாக பதவியேற்றிருக்கும் நாராயணன்-க்கு வாழ்த்துகள் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.