பரமக்குடி,அக்.19: பரமக்குடி அரசு கலைக்கல்லூரியின்
முதுகலை தொழில் நிர்வாகவியல் துறை முன்னாள் மாணவர்கள் சார்பில் பயன்படுத்திய நாப்கின் அழிப்பு இயந்திரத்தை கல்லூரி முதல்வரிடம் வழங்கினார்கள்.
பரமக்குடி அரசு அரசு கலைக்கல்லூரியில் முதல் மற்றும் இரண்டாம் சுழற்சி அடிப்படையில் 2500க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அதிகமான மாணவிகள் பயலக்கூடிய இந்த கல்லூரியில்,சுகாதாரம் காப்போம் என்ற நோக்கில் தொழில் நிர்வாகத்துறையில் 2006- 2008 ஆம் ஆண்டில் பயின்ற எம்பிஏ முன்னாள் மாணவர்கள் சார்பில் ,நேற்று கல்லூரி முதல்வர் சிவக்குமாரிடம் பயன்படுத்தப்பட்ட நாப்கின் அழிப்பு இயந்திரத்தை முன்னாள் மாணவர் வழக்கறிஞர் நவநீதன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், துறை தலைவர்கள் அறிவழகன், கண்ணன்,தினேஷ் பாபு, அலுவலக கண்காணிப்பாளர் ரகுபதி,உடற்கல்வி இயக்குனர் பிரசாத் உள்ளிட்ட பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பட விளக்கம்
பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் படித்த முன்னாள் எம் பி ஏ மாணவர்கள் பயன்படுத்தப்பட்ட நாப்கின் அழிப்பு இயந்திரத்தை கல்லூரி முதல்வர் சிவக்குமாரிடம் வழங்கினார்கள்.