தஞ்சாவூர் ஜூலை 8
தஞ்சை சங்கமம் – நம்ம ஊர் திரு விழா இரண்டு நாட்கள் நடக்கிறது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப் பதாவது:
நாட்டுப்புற கலையையும் கலைஞர்களையும் பேணி வளர்ப்ப தற்கும், தமிழ் மக்களின் பண்பாட்டு விழுமியங்களை கொண்டாடுவதற் கும், கலைஞர்களுக்கு நல்லவாய்ப் புகளை ஏற்படுத்தவும், சங்கமும் – நம்ம ஊரு திருவிழா என்ற பெய ரில் நடக்க அரசால் ஆணையிடப் பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் தஞ்சையில் செயல் படுத்தும் விதமாக தஞ்சாவூர்,திருவாரூர்,நாகை, மயிலாடுதுறை,கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மண்டல அளவில் தேர்வு செய்யப்பட்ட கலைஞர்க ளைக் கொண்டு தஞ்சை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா வருகிற 12 மற்றும் 13ஆம் தேதிகளில் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி அருகே உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய விளையாட்டு திடலில் நடத்தப்பட உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் உள்ள நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், மாடு ஆட்டம் ,தப்பாட்டம் ,நாட்டுப்புற பாடல் ,கிராமிய பல்சுவை, காளியா ட்டம் போட்ட நிகழ்ச்சிகள் மட்டுமல் லாமல், அழிந்து வரும் கலைஞர் களின் அரிய வகை கலைகளான பொம்மலாட்டம், கொம்பு வாத்தியம் இலாவணி, பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்ற கலைகளும் தஞ்சை மண்ணில் நடத்தப்பட உள்ளது.
மேலும் பேண்ட் வாத்தியம் சிலம்பாட்டம் ,புலியாட்டம், மல்லர் கம்பம் போன்ற கலைகளும் அரங்கேற்றம் செய்யப்பட உள்ளது மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டு ள்ளது.