நாகர்கோவில், ஜூன் 28
குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று காலை நடைபெற்றது.மேயர் மகேஷ் தலைமை வகித்தார் ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலை வகித்தார்.கூட்டத் தின் தொடக்கத்தில் 2024- 25ம் நிதியாண்டுக்கான உத்தேச நிதிநிலை அறிக்கையை மேயர் மகேஷ் வாசித்தார்.
அதன்படி வருவாய் மற்றும் மூலதன நிதியாக ரூ 147.81 கோடி, குடிநீர் வடிகால் மூலதன நிதியாக ரூ 53.08 கோடி என்று ரூ 200 கோடியே 99 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. அதேபோல் வருவாய் மூலதனத்தில் செலவினம் ரூ.155.98 கோடி, குடிநீர் வடிகால் செல்வினம் ரூ. 54,65 கோடி என மொத்தம் ரூ.210.61 கோடி செலவினமாக உள்ளது.
இதன்படி பற்றாக்குறை ரூ.9.62 கோடி ஆகும்.
இதையடுத்து மாமன்ற உறுப்பினர்கள் தரப்பில் கூறியதாவது:-
புத்தன அணை கூட்டு குடிநீர் திட்டத்தில் வீட்டு குடிநீர் இணைப்புகள்
வழங்கப்படுவதாக குடி நீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தவறான தகவல் களை மாநகராட்சிக்கு தருகின்றனர் வார்டுகளில் ஒவ்வொரு தெருக்களிலும் பல வீடுகளுக்கு இதுவரை குடிநீர் இணைப்பு வழங் கப்படவில்லை.
சில இடத்தில் இணைப்பு வழங்கப்பட்ட மீட்டர் பாக்ஸ் சோதனை ஓட்டத்தின் போது தண்ணீர் கசிவு
ஏற்பட்டுள்ளது சில இடங்களில் குழாய்கள் இணைப்பு விடுபட்டு குடி நீர் கசிவு ஏற்படுகிறது. இது வரை 31 முறை சோதனை ஓட்டம் நடந்துள்ளது ஆனால் ஒருமுறைகூட தண்ணீர் கசிவு சரி செய்யப்படவில்லை.
இதேபோல் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்ட போது தோண்டப்பட்ட பள்ளங்களும் சரியாக மூடப்படவில்லை அதனை உடனே மூட வேண்டும். எனவே
வீட்டு குடிநீர் இணைப்புகளில் உள்ள பழுதுகளை உடனே சரி செய்ய வேண் டும் போன்ற பல்வேறு குறைகளை தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த மேயர் மகேஷ் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கவுன்சிலர்களின் புகார்களுக்கு பதில் தெரிவிக்க வேண்டும். புத்தன் அணை கூட்டு குடிநீர் திட்டத்தை பொறுத்த வரை கிருஷ்ணன்கோவில் நீரேற்றம் வரும் வரை கசிவு குழாய் சேதம் என எந்தவித பிரச்சனையும் இல்லை வீட்டு குடிநீர் இணைப்புகளில் உள்ள பழுதுகளை உடனே சரி செய்ய வேண்டும்.
சானல்களில் மாநகராட்சி தூர்வாரினால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் போலீசில் புகார் தெரிவிக்கின்றனர். நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. கால்வாய்களை நீங்களே தூர்வார வேண்டுமென எச்சரிகை செய்வதோடு, கலெக்டர் மூலமும் தீர்வளத்துறைக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது. தெருவிளக்கு பழுதுகள் உடனே சரி செய்யப்படும். இவ்வாறு மேயர் மகேஷ் பேசினார்.