நாகர்கோவில் ஜூன் 1
நாகர்கோவில் மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியம் மாநகராட்சியில் பணியாற்றி சுமார் 11 கோடியளவில் நிதி இழப்பு ஏற்படுத்தி இருப்பதாக தணிக்கை துறை மூலம் தடை எழுப்பப்பட்டிருந்த நிலையில் நேற்று அவர் பணி ஓய்வு பெற இருந்தவர் திடீர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் என்ஜினீயராக பணியாற்றியவர் பாலசுப்பிரமணியன். நாகர்கோவில் நகராட்சியாக இருந்த காலத்தில் இருந்தே அவர், இங்கு பணியில் உள்ளார். அவர் நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார்.
இந்த நிலையில் என்ஜினீயர் பால சுப்பிரமணியன் திடீரென பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை சென்னை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர். இந்த தகவல் மாநகராட்சி பணியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
என்ஜினீயர் பால சுப்பிரமணியன் மீது பல்வேறு புகார்கள் இருந்ததாகவும், அதன் அடிப்படையிலேயே சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பணி ஓய்வு பெறும் நாளில் மாநகராட்சி என்ஜினீயர் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம் அரசு ஊழியர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இவரால்
நாகர்கோவில் மாநகராட்சிக்கு 11 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இவர் மீது தணிக்கை துறை நடவடிக்கை எடுக்க கேட்டு நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.