தென்தாமரைகுளம் பிப் 27
நாங்கள் திராவிடர்கள் அல்ல. நாங்கள் தூய தமி ழர்கள் என நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர்பேசினார்.
நாம் தமிழர் கட்சி சார் பில் கொட்டாரத்தில் பொதுக்கூட்டம் நடை பெற்றது. மாவட்ட தலைவர் தீபக் சாலமன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் மைக்கேல் எடில்பெர்ட், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், செய்தி தொடர்பாளர் விஜேஷ், மண்டல செயலாளா பெல்வின் ஜோ, மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயன்றீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தி னர்களாக மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர், மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன், மாநில இளைஞர் பாசறை ஒருங் கிணைப்பாளர் ஹீம்லர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் பேசிய தாவது:
தமிழகத்தின் இன்னும் 10 ஆண்டுகள் திராவிட ஆட்சி நடந்தால், டாஸ் மாக் போல், போதை பொருளுக்கும் விற்பனை நிலையம் வரும். மதம் நிறைய விஷயங்களை கொண்டுவந்தது. கல்வி, பண்புகளை போதித் தது இல்லை என்று சொல்ல முடியாது. அது ஒரு காலம். இப்போ மதத்தை பணம் சம்பா திப்பதற்கும், அதனை பாதுகாக்கவும் பயன்ப டுத்துகின்றனர். மதத்தை உணர்வாக பார்ததால் பிரச்னை இல்லை. மதம் போதையாக இருப்ப
தால் தான் பிரச்னையே.
நாங்கள் திராவிடர்கள் அல்ல. நாங்கள் தூய தமிழர்கள். எங்களுக் கான வரலாறு உங்களை விட பெரிது. உங்களது சதி வேலையால் நாங்கள் பாதிக்கப்பட்டு விட் டோம். இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில், பத்மனா பபுரம் மாவட்ட தலை வர் சீலன், கிள்ளியூர் மாவட்ட செயலாளர் ஜெங்கின்ஸ், 2026 சட் டமன்ற தேர்தல் வேட்பாளர் முத்து குமார், நாகர்கோவில் மாவட்ட செயலாளர் தனுஷ், குளச்சல் மாவட்ட தலைவர் சுஜித், குளச்சல் மாவட்ட செயலாளர் ஹரிஹரன் கலந்து கொண்டனர்.