கன்னியாகுமரி ஆக 19
2047ல் இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க கருணாநிதியின் தொலைநோக்கு பார்வை உதவும்.தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையையும் வளர்த்தெடுக்க கருணாநிதி அரும்பணியாற்றியுள்ளார் என கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழாவையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் அனுப்பியுள்ளார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சி நிர்வாகி மரிய ஜெனிபர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;
குமரி மாவட்ட மக்கள் பி.ஜே.பி.க்கு எதிராக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர். காங்கிரஸும் திமுக வும் கூட்டணியில் இருக்கும் கட்சி.
பிஜேபி க்கு எதிராக திமுக,காங்கிரஸும் நிற்கும் என எதிர்பார்த்து வாக்களித்த மக்கள் ஏமாறுவார்கள் என்பது தான் பிரதமரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை துவக்கமாக நினைக்கிறேன்.
திமுக வும், பிஜேபி யும், காங்கிரஸும் ஒரே கட்சி தான். அவர்கள் வேறு வேறு கிடையாது.
பி.ஜே.பி க்கும்,தி.மு.க வுக்கும் கொள்கை கிடையாது.நாளை பிஜேபி மக்களின் சுதந்திரத்திற்கு எதிராக கிறிஸ்தவர்களின் ஆலயங்களை அகற்றுவோம் என்றோ, இஸ்லாமிய சொந்தங்களுக்கு எதிரான திட்டங்களை அமல்படுத்தினாலோ கூட திமுக, காங்கிரஸ் கட்சிகளால் எதுவும் செய்ய முடியாது.
பிஜேபி என்ன நடத்த வேண்டும் என்று நினைக்கின்றார்களோ அதை திமுக வழிமொழியும்.
பிஜேபி யின் அம்பு தான் திமுக, காங்கிரஸ். விரைவில் காலம் அதை மக்களுக்கு தெரியபடுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.