தென்தாமரைகுளம்., அக். 1.
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியும் ,மயிலாடி றிங்கல்தௌபே மேல்நிலைப்பள்ளியும் இணைந்து நடத்தும் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் கடந்த 27-ம் தேதி தொடங்கி வருகிற 3-ம் தேதி வரை மயிலாடி, அகஸ்தீஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் 3-ம் நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் கால்வின் கலந்து கொண்டு நெகிழி ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு குறித்து பேசினார். முன்னதாக ஒசரவிளை பகுதியில் நெகிழி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. துவக்க நாள் நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் புஷ்பலதா தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் ஜெரோம் எமில் முன்னிலை வகித்தார். முன்னாள் தாளாளர் ஆல்வின்நாயகம் சிறப்புரையாற்றினார்.முகாமில் தினமும் யோகா, சுற்றுவட்டார பகுதிகளில் துப்புரவு பணிகள் மற்றும் களப்பணிகள் நடைபெற்று வருகின்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் ஜாஸ்பர் ஏஞ்சலா மற்றும் ரோஸ் பியூலா ஆகியோர் செய்து வருகின்றனர்.