நாகர்கோவில் நவ 25
நாகர்கோவில் அருகே உள்ள என். ஜி. ஓ. காலணியில் உள்ள தூய பாத்திமா அன்னை ஆலய பங்கு மக்களும், சி.எஸ்.ஐ. சபை பங்கு மக்களும் இணைந்து மணவாளக்குறிச்சியில் உள்ள இந்திய அரிய மணல் ஆலையின் அரிய மணல் அகழாய்வுக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் என்.ஜி. ஓ. காலனியில் உள்ள தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் இருந்து சி.எஸ்.ஐ. ஆலயம் வரை நடைபெற்றது. இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு தூய பாத்திமா அன்னை ஆலய துணைத்தலைவர் ஜி.உபால்டு ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் அருள் சேவியர் மற்றும் சி. எஸ். ஐ. சபை போதகர், செயலாளர் பிரின்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பங்கு மக்கள் கலந்து கொண்டு 1 மணி நேரம் மனித சங்கிலி அமைத்து எதிர்ப்பை தெரிவித்தனர்.