ஊத்தங்கரை அருகே பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 30 ஆடுகளை கடித்த மர்ம விலங்கு 11 ஆடுகள் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த நல்லவன் பட்டி கிராமத்தை சேர்ந்த ரகுபதி என்பவர் தென்பெண்ணை ஆற்று கரையோரம் அவரது உறவினரின் விவசாய நிலத்தில் வளர்த்து வந்த 30 ஆடுகள் நேற்று வழக்கு போல மேச்சலை முடித்து வந்த ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்கு வந்து உள்ளார்.
விடியற்காலை ஆடுகள் இருக்கும் இடத்திற்கு சென்று பார்த்த போது மர்ம விலங்குகள் கடித்ததில் ஆங்காங்கே ஆடுகள் அனைத்தும் இரத்தவெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனை கண்ட ரகுபதி தனது வாழ்வாதாரமே ஆடுகள்தான் இப்போது அனைத்தையும் இழந்து நிர்கதியாய் தவிப்பதாக
கூறிய அவர் இதன் ரூபாய் 2,00,000 மதிப்புள்ள ஆடுகளை மர்ம விளங்கு கடித்ததால் எனது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அரசு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.