வேலூர் 23
வேலூர் மாவட்டம், கே. வி. குப்பம் தாலுகா, லத்தேரி ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவிலில் மயிலார் திருவிழா கோலாகலமாக நேற்று முன் தினம் இரவு கொண்டாடப்பட்டது. இந்த மயிலார் திருவிழாவை முன்னிட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ தண்டு மாரியம்மன் உற்சவமூர்த்தி மற்றும் விநாயகர் ஊர்வலமாக புறப்பட்டு விடிய விடிய நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நேற்று அதிகாலை கோயிலை வந்து அடைந்தது. இந்த மயிலார் திருவிழாவை முன்னிட்டு இன்னிசை கச்சேரி மற்றும் அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் பகலில் தொடங்கி நள்ளிரவு வரை இடைவிடாது நீடித்தது. இந்த மயிலார் திருவிழாவை முன்னிட்டு லத்தேரி நகரம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது குறிப்பிடத்தக்கது. இந்த மயிலார் திருவிழாவில் லத்தேரி, கனக சமுத்திரம், கம்பத்தம், ரசிலாப்பாக்கம், சின்ன லத்தேரி, கீழலத்ததேரி, மேல் லத்தேரி உள்ளிட்ட ஏழு ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். பூஜையில் பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்ரீ தண்டுமாரியம்மனை தரிசனம் செய்தனர். பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில் நிர்வாகிகள் விமரிசையாக செய்திருந்தனர். லத்தேரி போலீசார் பாதுகாப்பு பணியில் விடிய விடிய ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.