சென்னை, ஜூன், 25,
எம்.வி.நீரிழிவு மருத்துவமனை சார்பாக சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பொது நலம் மற்றும் நீரிழிவு நோயைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பொதுமக்களுக்கு
இலவச யோகா முகாம் நடைபெற்றது.
எம்.வி.நீரிழிவு மருத்துவமனை ராயபுரம் அதன் கிளை மையங்களான அடையாறு மற்றும் வேளச்சேரியில் ஆன்லைன் யோகா வகுப்புகளை வழங்கியது.
இந்த யோகா முகாமில 18 வயது முதல் 60 வயது உள்ள சுமார் 100 பேர்; கலந்து கொண்டனர்.
மேலும் கே.ஆர்.எம் பொதுப் பள்ளி மாணவ, மாணவியர்கள் இந்த யோகா முகாமில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டாக்டர்.ஆர்.இளங்கோவன் கலந்து யோகா, தினசரி உடற்பயிற்சி குறித்து விவரித்தார். .
கே.ஆர்.எம் பொது பள்ளி மாணவ, மாணவியர்கள் இந்த யோகா முகாமில் கலந்து கொண்டனர்.
எம்.வி.நீரிழிவு மருத்துவமனை தலைவர் மற்றும் தலைமை நீரிழிவு நிபுணர் டாக்டர்.விஜய் விஸ்வநாதன் உரையில் தெரிவித்ததாவது:-
கடந்த 69 ஆண்டுகளாக எம்.வி மருத்துவமனையில் ஒரு குழுவை உருவாக்கி மருந்துகள் உணவு முறை மற்றும் கல்வி மூலம் சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி உடல் செயல்பாடு மற்றும் பயிற்சி மூலம் நீரிழிவு நோயாளிகளுக்கு முழுமையான சிகிச்சை வழங்குகிறோம். எங்கள் ஆலோசகர்களின் உதவியுடன் உணவு கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ நாங்கள் அவர்களுக்கு உதவுகிறோம்.
நீரிழிவு நோயாளி யோகா பயிற்சி செய்வதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு தூக்கத்தின் தரம் இரத்த அழுத்தம் கொழுப்பு சத்து மற்றும் தேவைப்படும் மருந்துகள் ஆகியவற்றால் மேம்படும் என்பது குறித்து மூன்று ஆய்வு கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம்.