தென்தாமரைகுளம்., டிச. 17.
பூவியூர் இந்து நாடார் சமுதாய வகைக்கு உட்பட்ட தேவி முத்தாரம்மன் கோவிலில் கார்த்திகை சிறப்பு கொடை விழா செவ்வாய்க்கிழமை தொடங்கி நாளை புதன்கிழமை வரை 2 நாட்கள் நடைபெறுகிறது.
முதல் நாளான இன்று இரவு 6.30 மணிக்கு நாதஸ்வர இசை,9.30 மணிக்கு வில்லிசை, 10.30 மணிக்கு சாஸ்தாவுக்கு தீபாராதனை, 11 மனிக்கு சாமிக்கு தீபாராதனை,அதிகாலை 2 மணிக்கு பத்திரகாளி அம்மன், முத்தாரம்மன், மாரி அம்மன், உச்சினிமாகாளி அம்மன் மற்றும் பிறகாவல் தெய்வங்களுக்கும் தீபாராதனை, 4 மணிக்கு தேவி முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கோயிலை சுற்றி வலம் வருதலும் நடக்கிறது.
இரண்டாம் நாளான நாளை புதன்கிழமை காலை 6 மணிக்கு சுடலைமாட சுவாமி, இசக்கியம்மன்,
செங்கிடாகார சுவாமி, கருங்கிடாகார சுவாமி மற்றும் பிறகாவல் தெய்வங்களுக்கும் தீபாராதனை,காலை 11மணிக்கு தேவியின் திருவருட்பிரசாதம் வழங்குதலுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.