நீலகிரி. ஏப்ரல். 20.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் வருடாந்திர உற்சவ விழா நடந்து வருகிறது. இதில் மாரியம்மனுக்கு அலங்காரத்துடன் அபிஷேக அர்ச்சனைகளும், சுற்றுவட்டார மக்களின் வேண்டல் பூஜைகளும் நடந்து வருகிறது. நிகழ்வில் அனைத்து மக்கள் சார்பாக மகா அன்னதானமும் நடைபெற்றது. மதங்களைக் கடந்த மனிதநேயத்துடன் சகோதரத்துவ நிகழ்வாக சமூக நல்லிணக்க சந்திப்பாக கோத்தகிரி பெரிய பள்ளிவாசல் சார்ந்த இஸ்லாமிய சகோதரர்கள் கோவிலுக்கு வந்து இந்து சமய நிர்வாகிகள், அறங்காவலர்கள், பக்தர்களுடன் கலந்து கொண்டதை அனைத்து சமூகத்தினரும் மன நெகிழ்ச்சியுடன் வரவேற்று மகிழ்ந்தனர். இஸ்லாமிய சகோதரர்களுக்கு திருக்கோயில் சார்பாக நன்றிகளை தெரிவித்தனர்.
மாரியம்மன் கோவில் உற்சவத்தில் கலந்துகொண்ட இஸ்லாமியர்கள்.

Leave a comment