மக்கள் சேவையில் பயணிக்கும் மாவட்ட இசை கலைஞர் அரசின் உதவிக்காக காத்திருப்பு.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதி கெட்டிக்கம்பை எனும் கிராமத்தில் வசிப்பவர் கணேஷ். இவர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பிரபல தபேலா இசை கலைஞராவார். நீண்ட நாட்களாக மண்ணின் மக்கள் இசையை பரப்புவதில் ஆர்வம் காட்டி வருகிறார். பல மேடைகளில் இசை கலைஞராக பணியாற்றி வருகிறார். 25 ஆண்டுகளுக்கு முன்பே அறிவொளி திட்டம் மூலம் கிராம பகுதியில் நாட்டுப்புற இசை பாடல்களை பாடி கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தார். மாவட்ட அரசு, மாநில அரசின் பல பாராட்டு சேவை சான்றுகளை பெற்றுள்ளார். தற்போது வசதி வாய்ப்பின்றி வாழ்ந்து வரும் தபேலா கணேஷ் என்கிற இவர் அரசின் உதவிக்காக காத்திருக்கிறார். பொதுவாக கலைஞர்கள் என்பவர் வறுமையிலேயே வாழ்கிறார்கள் என்றாலும் மக்கள் இசையை முன்னெடுக்கும் இவர் போன்றவர் அடையாளப்படுத்துவது அவசிய தேவையாவும்.