நாகர்கோவில் ஆக1
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, முப்பந்தல் அருள்மிகு ஸ்ரீ ஆலமூடு இசக்கியம்மன் திருக்கோயில் பூக்குழி கொடைவிழாவில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். அங்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. பின்னர் இத்திருக்கோயில் கொடைவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக தளவாய்சுந்தரம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும் போது கூறியதாவது:-
இத்திருக்கோயில், மக்கள் பெருமளவில் வந்து அம்மனை தரிசித்து வழிபாடு நடத்தி செல்லும் சிறப்பை பெற்ற திருத்தலமாக விளங்கி வருகிறது. குறிப்பாக ஆடி மாதத்தில் இக்கோவிலில் பூக்குழி கொடைவிழா சிறப்புற கொண்டாடப்பட்டு வருகிறது. பக்தர்கள் இங்கு வந்து அம்மனை தரிசித்து இறையருள் பெற்று செல்கிறார்கள். சக்தி வாய்ந்த திருத்தலமாக இக்கோவில் விளங்கி வருகிறது. குமரி மாவட்டத்திலிருந்து மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தும் கேரள மாநிலம் உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மக்கள் இங்கு வந்து அம்மனை தரிசித்து இறையருள் பெற்று செல்கிறார்கள். இக்கொடைவிழாவினை முன்னிட்டு திருக்கோவில் நிர்வாகம் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழாவை சிறப்புற ஏற்பாடு செய்துள்ளது. இக்கொடைவிழா சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கிறேன் என அவர் பேசினார். பின்னர் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இவ்விழாவில் தோவாளை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சாந்தினிபகவதியப்பன், ஆரல்வாய்மொழி பேரூராட்சித்தலைவர் முத்துக்குமார், அருள்மிகு ஸ்ரீ ஆலமூடு அம்மன் கோவில் நிர்வாக டிரெஸ்ட் தலைவர் டாக்டர் அருணாசலம், செயலாளர் மாடசாமி, பொருளாளர் கிருஷ்ணம்மாள், இணைச் செயலாளர் மாரியப்பன், துணைத் தலைவர் சதீஸ், துணைச் செயலாளர் அருணாஸ்டாலின், சட்ட ஆலோசகர் அன்பைய்யா மனுவேல், பக்தர்கள் சேவா சங்க தலைவர் சத்தியசீலன், துணைத் தலைவர் மகாலிங்கம், செயலாளர் மகாலிங்கம், துணைச் செயலாளர் வினோ, பொருளாளர் இசக்கி ராஜா, இணைப் பொருளாளர் அருள்ராஜ், பெண்கள் சேவா சங்க தலைவர் பேபிமுருகன், துணைத் தலைவர் ஸ்ரீலேகா, செயலாளர் செல்லம், துணைச் செயலாளர் அனிஷா, பொருளாளர் சுதாம்பிகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.