சுசீந்திரம் அக்.19
குமரி மாவட்டம் சுசீந்திரம் தானுமாலயா சுவாமி கோவில் அருகே உள்ள முன்னுதித்த நங்கை அம்மன் வருடம் தோறும் நவராத்திரி விழாவில் பங்கெடுத்து கொள்வதற்காக திருவனந்தபுரம் சென்று பத்து நாட்கள் பூஜையில் கலந்து கொண்ட பின்பு அங்கிருந்து புறப்பட்டு சுசீந்திரம் கோவில் வந்தடைவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு நவராத்திரி விழாவில் பங்கெடுத்துக் கொள்வதற்காக கடந்த 30 ஆம் தேதி மேளதாளங்கள் முழங்க தமிழக கேரளா காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையுடன் திருவனந்தபுரம் சென்றது அங்கிருந்து வேளிமலை முருகர் தேவார கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சுவாமிகளும் திருவனந்தபுரம் சென்று பத்து நாள் திருவிழா முடிந்து அங்கிருந்து புறப்பட்டு மேளதாளங்கள் முழங்க தேவரகட்டு சரஸ்வதி அம்மன் தேவாரக் கட்டுக்கோவிலுக்கும் வேளிமலை முருகர் வேளிமலைக்கும் சுவாமிக்கு ஆராட்டு முடிந்து கருவறைக்கு கொண்டு செல்லப்பட்டனர் பின்பு முன்னுதித்தநங்கை அம்மன் நேற்று காலை 8 மணி அளவில் சுசீந்திரம் வந்தடைந்தது. பின்பு ரத வீதியை சுற்றி கோவிலுக்கு வந்தது பின்பு சுவாமிக்கு ஆறட்டுநடைபெற்றது. அதன் பின் கோவில் கருவறைக்கு கொண்டு சென்று சிறப்பு அலங்கார தீவாரணை நடைபெற்றது. இதில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் பெருமளவு வந்து சாமி தரிசனம் செய்தனர்.