சங்கரன்கோவிலில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த கனமழையால் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் மழைநீர் சூழ்ந்ததால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்
சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த புதன் கிழமை இரவு முதல் லேசான மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை முதல் கனமழை நேற்று வரை பெய்து வந்தது. இந்த கனமழையால் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலின் உள்பகுதியில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்தது நேற்று திருக்கார்த்திகையை முன்னிட்டு கோயிலுக்கு தரிசனம் செய்த செய்ய வந்த பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.மேலும் கோயிலின் உள்ளே அமைந்துள்ள நாகசுனை தெப்பம் நிரம்பியதாலும் கோயிலில் உள்ளே புகுந்த மழை நீர் வெளியே செல்ல வழி இல்லாததால் பக்தர்களின் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நின்றது. இதனை சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, நகராட்சி கமிஷனர் சபாநாயகம் ,கோயில் பொறியாளர் முத்துராஜ் , நகராட்சி சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் சுகாதார ஆய்வாளர்கள் கருப்பசாமி கைலாச சுந்தரம் ஆகியோர் கொண்ட குழுவினர் பார்வையிட்டு தேங்கி இருந்த தண்ணீரை வெளியேற்ற முயற்சி மேற்கொண்டனர். இதில் நகராட்சி மற்றும் கோயில் பணியாளர்கள் தேங்கி இருந்த மழை நீரை மோட்டார் மூலம் மாட வீதியில் உள்ள வாறுகாலுக்கு அனுப்பி மழை நீரை அப்புறப்படுத்தினர்.