கீழக்கரை ஆக 30-
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வடக்கு தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ புல்லாணி மாரியம்மன் ஆலயத்தின் முளைக்கொட்டு உற்சவ விழா கடந்த செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுடன் துவங்கியது இதனை தொடர்ந்து ஒரு வார காலமாக அம்மனுக்கு பல்வேறு விதமான அபிஷேகங்கள் நடைபெற்றது இரவு முழுவதும் ஒயிலாட்டம் கும்மியாட்டம் ஆகியவை நடைபெற்றது ஒரே இடத்தில் வளர்க்கப்பட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட முளைப்பாரிகள் அம்மன் கரகத்துடன் நான்கு தேரடி வீதி பகுதிகளில் உலா வந்தது இதனை தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனுக்கு தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்
விழாவின் முக்கிய நிகழ்வாக ஏராளமான பெண்கள் தலையில் முளைப்பாரிகளை சுமந்து ஊர்வலமாக வந்து ஸ்ரீ ஆதி ஜெகநாத பெருமாள் ஆலயத்தில் வைத்து கும்மி அடித்து வழிபாடு நடத்தினர் அதை தொடர்ந்து பெரிய ஊரணி பகுதியில் பாரிகளை கரைத்தனர்
விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருப்புல்லாணி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சிவசாமி தலைமையிலான போலிசார் மேற்கொண்டனர்