ராமநாதபுரம், ஜன.27-
இந்திய தேசத்தின் 76 வது குடியரசு தின விழா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தொண்டியில் தமுமுக தொண்டி பேரூர் அலுவலகத்தில் நடைபெற்றது. இராமநாதபம் கிழக்கு மாவட்ட மமக செயலர் ஒருங்கிணைப்பில் தமுமுக உலாமக்கள் அணி மாவட்ட செயலாளர் செய்யது முகம்மது காசிம் யூசுபி
தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தமுமுக மாநில செயலர் சாதிக்பாட்சா சிறப்புரை ஆற்றினார்.
பின்பு தேசிய கீதம் பாடப்பட்டு இனிப்பு மற்றும் தேநீர் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தமுமுக மமக நிர்வாகிகள்
தமுமுக பேரூர்தலைவர் காதர் மமக செயலாளர் பரக்கத் அலி தமுமுக செயலாளர் முகமது மைதின், பொருளாளர் அப்துல்லா 15வது வார்டு கவுன்சிலர் பெரியசாமி தொழில் நுட்ப அணி பஹ்ருல்லா, அஹமது இப்ராகிம் நிஸ்தார் ஓடாவி தெரு அபு பாபு ஆஷிக் அலிம் கான் அப்துல்லா அப்துல் ரஹீம் முஸ்தபா சபீர் பாய் நல்ல சிவம் அசன் ஜலால் கனி தமுமுக மமக தொண்டி பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமுமுக நகர செயலாளர் முகமது மைதீன் நன்றி கூறினார்.