இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் விளங்குளத்தூர் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் கன வள்ளி, முத்துவேல், தலைமையிலும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து
ஊராட்சி செயலாளர் மணிகண்டன் ஊராட்சியில் நடைபெற்ற திட்டப் பணிகள் குறித்து சபை முன்பு எடுத்துரைத்தார் அதன் பின்னர் மொத்தம் 17 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தின் போது ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் மகளிர் சுய உதவி குழுவினர்கள் உட்பட கிராமப் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.