திருப்பத்தூர் அடுத்த பேராம்பட்டு பகுதியில் மண் குன்று மலையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மாத மூன்றாம் சனி சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
கந்திலி:அக்:06, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட பேராம்பட்டு பகுதியில் உள்ள மண் குன்று மலை ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மாத மூன்றாம் சனி வெகு சிறப்பாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கிராம பகுதியில் அமைந்துள்ள இந்த திருக்கோயில் பிரசித்தி பெற்ற திருக்கோயிலாக உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் இக்கோயிலுக்கு வாரந்தோறும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். தற்போது புரட்டாசி மாதம் என்பதால் மூன்றாம் சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்கள் கோவிந்தா ! கோவிந்தா! என்ன முழக்கத்தோடு மலை அடிவாரத்தில் இருந்து மேல் உள்ளவரை நடந்து சென்று திருநாமத்தை செலுத்தி வழிபாடு செய்தனர். இயற்கை சூழலோடு குன்றின் மீது அமைந்துள்ள இ கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வருகை தந்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்துகிறார்கள். இத்திருக்கோயிலில் ஸ்ரீ சென்னை கேசவ பெருமாள் ஆலயம், விநாயகர் ஆலயம், சிவன் பார்வதி ஆலயம், அனுமன் ஆலயம், கருட வாகனம், திருக்கல்யாண மணி மண்டபம் என சிறப்பான கோயில்களை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் விளக்கு பூஜை நடைபெற்ற நிலையில் ஐந்து சனிக்கிழமைகள் வரை சிறப்பாக பக்தர்களின் வழிபாட்டிற்கு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் அடிப்படை வசதிகளை அவ்வப்போது குடிநீர், வாகனம் நிறுத்துமிடம், அன்னதானம் என பக்தர்களின் அடிப்படைத் தேவைகளை சிறப்பாக செய்து வருகின்றனர். இத்திருக்கோயிலுக்கு அறங்காவலர் குழு தலைவர் T. வரதராஜி, உறுப்பினர்கள் A. வெங்கடேசன், சென்ன கிருஷ்ணன், திருவண்ணாமலை திருமால் திருப்புகழ் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் என்ன பலரும் இணைந்து கோயிலின் வளர்ச்சிக்காக செயல்பட்டு வருகின்றனர். மங்கள வாத்தியத்துடன் பம்பை இசை முழங்க சிறப்பாக நடைபெற்றது. இக்கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.