திருப்பத்தூர்:ஜூலை:28, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் பேங்க் முன்பு திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை தலைமையில் திருப்பத்தூர் மாவட்ட திமுக சார்பில் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய எம்பி சிஎன்.அண்ணாதுரை
தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட வருகிறது இந்த பட்ஜெட்டில் தமிழக முதல்வர் வைத்த கோரிக்கை 37 ஆயிரம் கோடி ஆனால் கொடுக்கப்பட்டது 275 கோடி முதலமைச்சர் ஸ்டாலின் வைத்த கோரிக்கைகளை பாஜக அரசு ஒன்றை கூட நிறைவேற்றவில்லை எனவும் குற்றச்சாட்டினார்
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ்
திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி
திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேந்திரன்
மற்றும் திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள் , கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.