நாகர்கோவில் – ஜூலை – 20,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு வகையான பணிகள் நடைபெற்று வருகின்றன இப் பணிகளுக்காக தொண்டப் படுகின்ற குழிகள் மூடப்பட்டு அதில் உள்ள கற்க்கள் அப்படியே சாலைகளில் வாகனங்கள் செல்லும் போது பெயர்ந்து சாலைகளில் ஆங்காங்கே சிதறிக்கிடப்பதால் நான்கு சக்கர வாகனங்களின் சக்கரங்களில் இருந்து தெரித்து ஆங்காங்கே சாலையில செல்லும் பாதசாரிகள் மீது பட்டு பலத்த காயங்கள் ஏற்ப்படுகிறது. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் இந்த கற்க்களினால் நிலை தடுமாறி கீழே தவறி விழும் அபாயம் ஏற்ப்படுகிறது. நேற்று ஒழுகினசேரியில் கடும் போக்குவரத்து நெருக்கடிக்கிடையில்
சாலையில் சிதறிகிடக்கும் கற்களால் ஒரு இருசக்கர வாகன ஒட்டி தவறி விழுந்து பலத்த காயத்துடன் உயிர் தப்பினார், அதிர்ஷ்ட வசமாக பின்னால் வந்த வாகன ஒட்டுனர் சாமார்த்தியமாக தன்னுடைய வாகனத்தை இயக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது எனவே வாகன ஓட்டிகள் விபத்துகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.