நாகர்கோவில் ஜூன் – 10
குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது . அதனை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின் பெயரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.எனினும் திருட்டு சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.
நாகர்கோவில் அடுத்த இடலாக்குடி பகுதியை சேர்ந்தவர் சிவா சம்பவத்தன்று இவர் அவரது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் இரவு நிறுத்தி இருந்தார் மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது மோட்டார் சைக்கிளை காணவில்லை இதனால் அதிர்ச்சி அடைந்த சிவா அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தார் எனினும் மோட்டார் சைக்கிளை கண்டுபிடிக்க முடியவில்லை இதை அடுத்து அவர் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர் . அதில் சிவாவின் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் மூன்று பேர் சேர்ந்து லாக்கரை உடைத்து திருடி சென்ற காட்சி பதிவாகி இருந்தது இதை அடுத்து மோட்டார் சைக்கிளை திருடி சென்றவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.