நாகர்கோவில் – அக்- 22,
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் மின்வாரிய அலுவலக அதிகாரியின் மனைவி திருமணமான 6 மாதத்தில் நேற்று மர்மமான முறையில் பிணமாக தூக்கில் தொங்கினார். வரதட்சனை கொடுமையால் மாமியார் சித்திரவதை செய்து என் மகளை கொலை செய்து விட்டதாக பெற்றோர்கள் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் – பரபரப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தை சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 28 ) இவர் கொட்டாரத்தில் மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் . கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி இவருக்கும் கோவை மாவட்டம் கோவில் பாளையம் பகுதியை சேர்ந்த மின்வாரிய மேற்பார்வையாளர் பாபு என்பவரின் மகள் சுருதி பாபு ( வயது 24 ) என்பவருக்கும் திருமணம் முறைப்படி நடைப்பெற்றது. திருமணத்தின் போது பெண் வீட்டார் மணமகனுக்கு 45 பவுன் தங்க நகைகள், 5 லட்சம் ரொக்க பணம், ஏராளமான வெள்ளி பாத்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வரதட்சனையாக கொடுத்து உள்ளனர் . குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் கணவர் கார்த்திக்குடன் சுருதி பாபு புதுமண தம்பதியர்களாக வாழ்ந்து வந்த வீட்டில் அவர்களுடன் கார்த்திக்கின் தாய் செண்பகவள்ளியும், வசித்து வந்தார்.. இதில் 3 மாதங்கள் கடந்ததும் மாமியார் தரப்பில் அவரது மகளும் சேர்ந்து வரதட்சனை கொடுமை மற்றும் சித்திரவதை செய்ய தொடங்கினார்கள் திருமணம் ஆகி ஆறு மாதம் தான் ஆகிறது நேற்று வீட்டில் சுருதி பாபு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டாதாக கூறப்பட்டது . அதிர்ச்சி அடைந்த சுருதி பாபுவின் பெற்றோர்கள் கோவையிலிருந்து மின்னல் வேகத்தில் புறப்பட்டு குமரி மாவட்டம் வந்து என் மகளை வரதட்சனை கொடுமையால் மாமியார் சித்திரவதை செய்து கொன்று விட்டனர் . இது தற்கொலை இல்லை கொலை என பெற்றோர்கள் சுசீந்திரம் காவல் நிலையத்தில் நேற்று இரவு புகார் அளித்தனர் . இது குறித்து சுசீந்திரம் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர் இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரப்புரைப்பை ஏற்படுத்தி உள்ளது – சுருதி பாபுவின் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் ஆய்வுக்கூருக்காக அனுமதிக்கபட்டுள்ளது. இன்று உடல் ஆய்வு கூறு நடைபெற உள்ளது. நேற்று காலை சுருதி பாபு தன்னுடைய தாயாரின் கைப்பேசிக்கு அனுப்பிய வாய்ஸ் – மெசேஜில் வீட்டில் உள்ள பிரச்சனைகள் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளது. குறிப்பிடதக்கது.