தாமரைகுளம் டிச 9
குமரி மாவட்டம் தென்தாமரைகுளம்
பா.ஜ.நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் மற்றும்
வடக்கு தாமரைகுளம் பகுதியை சேர்ந்த பா.ஜ.,நிர்வாகிகள் சுரேஷ்,இளையராஜா உட்பட்ட ஏராளமானோர் நேற்று தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.
தென்தாமரைகுளம் தவெக அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற இணைப்பு விழா நிகழ்ச்சிக்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தொண்டரணி தலைவர் எட்வின் தலைமை வகித்தார்.
மாவட்ட இளைஞரணி தலைவர் பிரேம்குமார் முன்னிலை வகித்தார்.மாவட்டச் செயலாளர் மாதவன் புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதில்,தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அருள் சுதன், பாபு, தங்க பிரதீப், விக்டர், ராஜகணபதி, பெல்லார்மின், ஜெகன், மோன்சன், பெரோஸ்மின், சினோஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.