கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலமங்கலம் அருகே ஒசூர் நோக்கி வந்த கண்டெய்னர் லாரிக்குள் தீப்பற்றியதில், அதற்குள் இருந்த 40க்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து வருகின்றன.. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..
உத்தனப்பள்ளி பகுதியில் உள்ள குடோனிலிருந்து மகாராஷ்டிரா மாநில பதிவு எண் கொண்ட கண்டெய்னர் லாரியில் 40க்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் ஏற்றி கொண்டு ஒசூர் நோக்கி கொண்டு செல்லப்பட்டபோது
போடிச்சிப்பள்ளி என்னுமிடத்தில், லாரி மீது மின் கம்பி உரசியதில் தீப்பிடிக்க ஆரம்பித்ததாகவும் பலர் கூறியபோதும் கண்டுக்கொள்ளாத லாரி ஓட்டுநர், தீ அதிகரித்த பிறகே 5 கிமீ தொலைவில் நிறுத்தியதாக கூறப்படுகிறது
மளமளவென பரவிய தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்து வருகின்றனர். கண்டெய்னர் லாரி சாலையோரமாக நிறுத்தப்பட்டதால் போக்குவரத்திற்கு எந்த இடையூறும் ஏற்ப்படவில்லை
40 க்கும் அதிகமான வாகனங்கள் தீக்கிறையான நிலையில் கெலமங்கலம் போலிசார் தீவிர விசாரணை