வேலூர்_26
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கல்புதூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மாற்றுக் கட்சியிலிருந்து இணையும் நிகழ்ச்சி மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சி. தவெக கொள்கை பரப்புச் செயலாளர். I.தாஹிரா வேலூர் மாவட்டம் காட்பாடி மற்றும் கே வி குப்பம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் ஏ.நவீன் குமார் ஆகியோர் தலைமையில் மாற்றுக் கட்சியினர் இணைந்தனர் காட்பாடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் சாரங்கன் மற்றும் கருணாகரன் இப்ராஹிம் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்..
இதில் வேலூர் காட்பாடி ராணிப்பேட்டை ஆற்காடு மேல்விஷாரம் ஆம்பூர் வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ஜே.தாஹிரா முன்னிலையில் தங்களை தவெக கட்சியில் இணைத்துக் கொண்டனர். மேலும் இதனைத் தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது இதில் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்டோர் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டனர்
இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.