மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் புவி காப்பு அறக்கட்டளை சார்பில் மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கம் மற்றும் மாயூரம் வழக்கறிஞர் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை நீதிமன்ற வளாகங்களில் நட்டு வைத்தார். அதனை தொடர்ந்து மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கம் தலைவர் வேலு குபேந்திரன், மாயூரம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் கலைஞர், மாயூரம் வழக்கறிஞர் செயலாளர் பிரபு, வழக்கறிஞர் அறிவொளி, வழக்கறிஞர் ப்ரீத்திக்குமார், உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் இந்த நிகழ்வில் பங்கேற்ற நிலையில் 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதி , வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. புவி வெப்பமயமாதலை தடுக்கும் வண்ணம் இந்த மரக்கன்றுகளை ஐந்து வருடத்திற்கு புவி காப்பு அறக்கட்டளை நிர்வாகிகள் பராமரிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நீதிமன்ற வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics