ஜனவரி:8
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களின் நீண்டகால நிலுவை கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி அச்சங்கத்தினர் இன்று மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.அந்த வகையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஊராட்சி செயலர் காலி பணியிடங்களை நிரப்ப கோருதல், ஊராட்சி செயலர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க கோருதல், 100 நாள் வேலை திட்டத்திற்கு தனி ஊழியர் கட்டமைப்பை ஏற்படுத்த கோருதல் உள்ளிட்ட 21அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் சாந்தி தலைமையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மாவட்டத் தலைவர் பாஸ்கரன் மறியல் போராட்டத்தை துவக்கி துவக்கி வைத்தார் கோரிக்கை விளக்க உரையை மாவட்ட செயலாளர் செந்தில்குமார் உரையாற்றினார். மாவட்ட பொருளாளர் சரவணன் நன்றி உரை கூறினார்.
நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தில், திருப்பூர் மற்றும், பல்லடம், காங்கயம், உடுமலைப்பேட்டை ,அவிநாசி, மடத்துக்குளம் ஆகிய எட்டு வட்டாரங்களைச் சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலர்கள், அலுவலக ஊழியர்கள் என 200-க்கு மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர்..