ராமநாதபுரம், செப்.25-
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகர்
110/33-22 கே.வி. ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் உள்ள டவுன் 2 உயர் மின்னழுத்த பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுவதால் இன்று மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் அறிவித்துள்ளார்.
ராமநாதபுரம் ஆர்.எஸ். துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்
இதன் வழியாக மின் விநியோகம் செய்யப்படும் பகுதியான அரண்மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊரணி சுற்றியுள்ள பகுதிகள், முதுநாள் ரோடு , சூரன்கோட்டை, இடையார்வலசை, சிவன்கோயில் சுற்றியுள்ள பகுதிகள், சாலை தெரு,சர்ச், மார்க்கெட், யானைக்கள் விதி, kk நகர், பெரியகருப்பன் நகர், கோட்டை மேடு பகுதிகளில், பெரியகருப்பன் நகர், கோட்டை மேடு, எட்டிவயல், ஆகிய பகுதிகளில் இன்று 25.09.24 காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின்சாரம் இருக்காது.
இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.