நாகர்கோவில் அக் 25,
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் நேற்று மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
காவல் கண்காணிப்பாளர் , காவல்துறை அதிகாரிகள் குற்றம் நடவாமல் தடுப்பதில் முக்கியத்துவம் கொடுத்து செயலாற்ற வேண்டும், போக்ஸ்சே குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதை உறுதி செய்ய வேண்டும், பொது இடத்தில் அமர்ந்து மது அருந்துபவர்கள் மீது அதிகப்படியான வழக்குகள் பதிய வேண்டும் என பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்கள்.
குற்ற வழக்குகளை விரைவில் நீதிமன்ற விசாரணை முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர உதவியாக இருந்த அரசு வழக்கறிஞர்கள்
கஞ்சா, குட்கா வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிறப்பாக செயல்பட்டவர்கள்
கொடுங்குற்ற வழக்குகளில் விரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில் திறம்பட செயல்பட்டவர்கள்
குண்டர் சட்டத்தில் குற்றவாளிகளை கைது செய்வதில் தீவிரமாக செயல்பட்ட காவல் அதிகாரிகள்
விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு அலுவலில் சிறப்பாக செயல்பட்டவர்கள்
நீதிமன்ற அலுவலில் சிறப்பாக செயல்பட்ட காவலர்கள்
நீதிமன்ற பிடியாணைகளை நிறைவேற்றுவதில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்கள்
போக்ஸ்சோ வழக்கில் குற்றவாளிக்கு விரைவில் தண்டனை பெற்றுத்தர உதவியாக இருந்த காவலர்கள்
போலி ரசீது முத்திரைகளை பயன்படுத்தி கனிம வளங்களை எடுத்துச் சென்றவர்களை கைது செய்ய உதவியாக இருந்தவர்கள்
சிசிடிஎன்எஸ், கணினி வேலையில் சிறப்பாக செயல்பட்ட காவலர்கள்
முக்கிய பிரமுகர் பாதுகாப்பு அலுவல்களில் சிறப்பாக செயல்பட்ட காவலர்கள்
கோவில் பாதுகாப்பு அலுவல்களில் சிறப்பாக பணிபுரிந்த ஊர்க்காவல் படையினர் ஆகியோர்களை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சான்றிதழ் வழங்கினார்.