தேனி அக் 28:
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆணையின்படி மழைக்கால முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போடிநாயக்கனூர் பகுதிகளில் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி ஆகியோர் தலைமையில் போடிப் பகுதிகளில் உள்ள 33 வார்டுகளில் உள்ள ஓடைகளில் தூர்வாரப்பட்ட ஓடைகளில் சரியாக தூர்வாரப்பட்டு உள்ளதா தற்பொழுது பெய்து வரும் கனமழையால் வரும் காற்றாற்று வெள்ளம் சீராக செல்லுமா என்பது குறித்தும் காற்றாற்று வெள்ளத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கிறதா என்பதையும் அனைத்து வார்டுகளில் உள்ள மழைநீர் வடிகால்களை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் சரியாக எடுக்கப்பட்டுள்ளதா ஆகிய பணிகளை ஆய்வு செய்தனர் இந்த ஆய்வின்போது நகராட்சி பொறியாளர் வி குணசேகரன் மேலாளர் முனிராஜ் சுகாதார அலுவலர் மணிகண்டன் சுகாதார ஆய்வாளர் திருப்பதி உட்பட நகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்