100 நாள் வேலை பயனாளிகளுக்கு வட்டியுடன் பணம் வழங்க வேண்டும்
பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை.
பரமக்குடி,ஏப்.1: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை பார்த்த பயனாளிகளுக்கு, ஒன்றிய அரசு வழங்காத பணத்துடன் சேர்த்து வட்டியும் வழங்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நேற்று பரமக்குடியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சிவானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் மாரி, பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் முனியசாமி ,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு ஆலோசகராக பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகங்களில் பணியாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிவகுருநாதன் கலந்து கொண்டு ,மாவட்டத்தில் கட்சியின் பொறுப்பாளர்களை மறு சீரமைப்பு செய்து புதிய பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் என தெரிவித்து அதற்கான ஆலோசனைகள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசு நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை பார்க்கும் பயனாளிகளுக்கு வழங்கப்படாத கூலித்தொகையினை மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் சட்டத்தின்படி வட்டியுடன் சேர்ந்து ஒன்றிய அரசு வழங்க வேண்டும். அம்பேத்கரின் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் வாழ்க்கை வரலாறு குறித்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள் நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி கவிதா, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் சக்திவேல் , மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பூமி ராஜு,
இறுதியில் மாவட்ட பொருளாளர் மார்க் தங்கம் நன்றி கூறினார்.