கிருஷ்ணகிரி,மே.28-
மாநில அளவில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 500க்கு 499மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தேவதர்ஷினியை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் எம்.எல்.ஏ இனிப்பு வழங்கி பாராட்டி எதிர்காலத்தில் கல்வியில் பல சாதனைகள் படைத்து நமது மாவட்டத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என மாணவி தேவதர்ஷணியை வாழ்த்தி பேசினார். மேலும் இதற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் ஏ.சி.நாகராஜ், அஸ்லாம் ரகுமான் செரீப், பாளேத்தோட்டம் தலைமை ஆசிரியர் சரவணன், மத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆனந்திமாலா, ஆசிரியர் பெருமாள், போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பிரபாகரன் கலந்துக் கொண்டனர், இதற்கான ஏற்பாடுகளை புளியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியரும், மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் குமார் ஏற்பாடு செய்திருந்தார் மற்றும் பெற்றோர்கள் குணசேகரன், சுதா ராணி ஆகியோர் உடன் இருந்தனர்.
499 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் தே.மதியழகன் MLA இனிப்புகள் வழங்கி பாராட்டினார்.
Leave a comment