வேலூர்_20
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அருகே பி.கே.புரம் பேருந்து நிலையத்தில் பாலாஜி அடகு கடை நடத்தி வரும் சர்வன் சிங் என்பவர் நேற்றுமுன் தினம் இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இரவு ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் பக்கத்து கடையான காய்கனி கடையின் சுவற்றில் துளையிட்டு உள்ளே புகுந்து மர்ம நபர்கள் திருடச் சென்றுள்ளனர். அப்போது அந்த மர்ம நபர்கள் அடகு கடையில் உள்ள லாக்கரை உடைக்க முயன்றுள்ளனர். இந்நிலையில் லாக்கரை உடைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையில்வெளியில் ஆட்கள் வருவதை அறிந்து திருட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.
காலையில் வழக்கம்போல் அடகு கடையை திறப்பதற்கு வந்திருந்த கடையின் உரிமையாளர் சர்வன் சிங் கடையை திறந்து பார்த்தபோதுஅக்க கடையின் உள்ளே இருந்த லாக்கர் உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்
உடனடியாக கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வேலூர் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் மற்று மேப்ப நாய். கைரேகை நிபுணர்கள் உடன் கே.வி.குப்பம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விரல்ரேகைகளை சேகரித்தனர். இதுகுறித்து கே.வி.குப்பம் காவல் உதவி ஆய்வாளர் ஆதர்ஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.