சென்னை, அக். 30, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பகுதி மக்களாலும் தீபாவளி மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இந்நிலையில் தீபாவளியையொட்டி அனைவரையும் உற்சாகத்துபடுத்தும் வகையில்
“ஒரே தீபம் ஒரே பாரம்பரியம் ” என்ற நோக்கில்
கெவின் கேர் நிறுவனத்தின் சார்பில் சென்னை அண்ணாநகர் டவர் பூங்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி தீபங்கள் மூலம் இந்திய வரைபடத்தை உருவாக்கி தீபாவளியை கொண்டாடும் வகையில் பார்வையாளர்களை கவர்ந்தது.
இதற்கான ஏற்பாடுகளை கவின்கேர் நிறுவனத்தின் பிராண்டான “மீரா”‘பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் பேசிய கவின்கேர் நிறுவனத்தின் பர்சனல் கேர் – பிசினஸ் ஹெட் ரஜத் நந்தா கூறுகையில், ஒரு பிராண்டாக, மீரா எப்போதும் பாரம்பரியத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது.
நாம் பெற்ற அனுபவங்களையும், கடைபிடித்து வந்த
மரபுகளையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
வாழ்க்கையில் தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் குறிக்கும் தீபங்களை ஏற்றி பழக்கவழக்கங்களை மதித்து தீபாவளியை பண்டிகையை கொண்டாடுகிறோம்.
இதில் பங்கேற்றவர்கள் ஏற்றிய தீபம் ஒவ்வொன்றும் நம் நாட்டின் சக்தியை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது. நாம் ஒவ்வொருவரும் எங்கிருந்து வந்தாலும், நாம் அனைவரும் நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தால் இணைந்துள்ளோம் என்பதை இந்த நிகழ்ச்சி நமக்கு நினைவூட்டுகிறது என்று தெரிவித்தார்