செங்கல்பட்டு.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கேளம்பாக்கம் ஊராட்சியில் தமிழ் அன்னை சமுதாய நலக்கூடத்தில் மக்களுடன் முதல்வர் முகாமில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தர்மபுரி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக மக்களுடன் முதல்வர் முகாமினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம் கேளம்பாக்கம் ஊராட்சியில் தமிழ் அன்னை சமுதாய நலக்கூடத்தில் மக்களுடன் முதல்வர் முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்ராஜ் அவர்கள் தலைமையில் குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார் இக்கூட்டத்தில் சாலை வசதி குடிநீர் வசதி, மின்சார வசதி போக்குவரத்து வசதி பட்டா மாற்றம் முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட மனுக்கள் பெறப்பட்டன தமிழக அரசு சார்பில் பல மாவட்டங்களில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் இன்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது புதிய மின் இணைப்பு மின் கட்டண மாற்றங்கள் மின் இணைப்பு பெயர் மாற்றம் கூடுதல் மின் கட்டணங்கள் உள்ளிட்ட மின்சார சேவைகளுக்கான விண்ணப்பத்தை மின்வாரியத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் வருவாய் துறையின் சார்பில் பட்டா மாற்றம் பட்டா உட்பிரிவு நில அளவீடு சாதி சான்றிதழ் வாரிசு சான்றிதழ் வருமான சான்றிதழ் இருப்பிட சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்கள் முதியோர் கைம்பன் விதவைகள் கணவனால் கைவிடப்பட்டவர் மாற்றுத்திறனாளிகள் மூன்றாம் பாலினத்தவருக்கான முதிர் கன்னி உதவித்தொகை பட்டாவினை இணையதளத்தில் பதிவு செய்தல் பிறப்பு இறப்பு காலதாமதமாக பதிவு செய்தல் பட்டா சிட்டா நகல் போன்ற விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் வீட்டு வரி குடிநீர் வரி பெயர் மாற்றங்கள் குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்பு கட்டுமான ஒப்புதல் திடக்கழிவு மேலாண்மை திட்டம் வர்த்தக உரிமம் கோருதல் போன்ற விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் குடும்ப அட்டையில் பெயர் மாற்றம் மற்றும் முகவரி திருத்தம் போன்ற விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் சார்பில் கட்டுமான வரைபட ஒப்புதல் நில வகைப்பாடு மாற்றத்திற்கான ஒப்புதல் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடு கோருதல் வீட்டு வசதி வாரியத்தால் வழங்கப்பட்ட ஒதுக்கீடுகளுக்கான விற்பனை பத்திரம் போன்ற விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறையின் சார்பில் நில அபகரிப்பு மோசடி மற்றும் இதர புகார்கள் போக்சோ சட்டத்தின் கீழ் புகார்கள் பொருளாதார குற்றங்கள் தொடர்பான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் அடையாள அட்டைகள் பராமரிப்பு உதவித்தொகை மாற்றுத்திறனாளிக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் 4 சக்கர நாற்காலி மூன்று சக்கர வண்டி செயற்கை கால் காது கேட்கும் கருவி இதர உதவி உபகரணங்கள் சுயதொழில் வங்கி கடன் போன்ற கோரிக்கைகளின் விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை இயல் துறையின் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் புதுமைப்பெண் கல்வி உதவித்திட்டம் ஆதரவற்றோருக்கான உதவித்தொகை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஏற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைகளின் சார்பில் இலவச வீட்டு மனை பட்டா கல்வி உதவித்தொகை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்து துறையின் சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் தொடர்பான மனுக்கள் வேளாண்மை துறையின் சார்பில் நுண்ணீர் பாசனம் தொடர்பான கோரிக்கைகள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பட்டியலின பழங்குடியின விவசாயிகளுக்கு நீர் ஆதாரம் உண்டாக்குதல் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் வீட்டுத் தோட்டம் அமைத்தல் இ – வாடகை போன்ற விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால்வளம் மீன்வளம் மீனவர் நலத்துறையின் சார்பாக மீனவர் நலத்திட்டங்கள் சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணைகள் நிறுவும் திட்டம் தொடர்பான விண்ணப்பங்கள் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் நல வாரியங்களில் உறுப்பினர் பதிவு புதுப்பித்தல் உதவித்தொகை ஓய்வூதியம் தொடர்பான விண்ணப்பங்கள் வாழ்வாதார கடன் உதவிகளான மகளிர் சுய உதவி குழுக்கடன் கூட்டுறவு சங்கங்களின் மூலம் கடனுதவி மாற்றுத்திறனாளிகளுக்கான சுயதொழில் வங்கிக் கடனுதவி தாட்கோ கடன் உதவி தொழில் முனைவோருக்கான கடன் உதவிகள் போன்ற விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் இன்றைய மக்களுடன் முதல்வர் முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 5 நபர்களின் குடும்பத்திற்கு இயற்கை மரண உதவித்தொகை 10 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள் ஒரு பயனாளிக்கு திருமண உதவித்தொகை ஐந்து பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் இரண்டு பயனாளிகளுக்கு சுயதொழில் தொடங்குவதற்கான கடனுதவி சுகாதாரத் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு விலையில்லா சலவைப பெட்டி மற்றும் தையல் இயந்திரங்கள் வேளாண்மை துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு உரக் கலவை மற்றும் மைக்ரோ நியூட்ரியன் கலவை என மொத்தம் 47 பயனாளிகளுக்கு ரூபாய் 20.12 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார் மேலும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துரையின் மூலம் மரக்கன்றுகள் வழங்க வேண்டி மனு அளித்த இரண்டு பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள் ஒரு பயனாளிக்கு பழச்செடி தொகுப்பும் வழங்கினார் இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் மனு அளித்த மூன்று நபர்களின் மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட அட்டைகளையும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மனு அளித்த மாற்றுத்திறனாளி பயனாளிக்கு உடனடியாக சக்கர நாற்காலிகனை மாண்புமிகு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் . எஸ்.பாலாஜி மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அனமிகா ரமேஷ் மாவட்ட வளங்கள் அலுவலர் துணை ஆட்சியர் (பொ) சாகிதா பர்வீன் திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் திருப்போரூர் ஆத்ம வேளாண்மை குழுத் தலைவர் பையனூர் சேகர் கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் துணைத் தலைவர் பாஸ்கர் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்