சிவகங்கை:டிச:05
சிவகங்கை மாவட்ட திமுக துணைச் செயலாளரும் ஊராட்சி மன்றத் தலைவருமான கே.எஸ்.எம்.மணிமுத் து அண்மையில் இயற்கை எய்தியதை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட திமுக சார்பில் சிவகங்கையில் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கை நகர்க்கழக செயலாளரும் நகர்மன்றத் தலைவருமான சி.எம்.துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் முகவை தென்னவன் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி இரவிக்குமார் மாவட்ட துணைச் செயலாளர் சேர்மன் சேங்கை மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் பெரியகருப்பன்
மணிமுத்து நினைவு கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றி வைத்து சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அமைச்சர் பெரிய கருப்பன் பேசும்போது மணிமுத்து அவர்களின் வாழ்க்கை வரலாறுகளை பற்றி நினைவு கூர்ந்தார்.
அப்போது அவர் கூறுகையில் மணிமுத்து ஒரு படித்த பட்டதாரி ஓர் வழக்கறிஞர் அவர் ஓர் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்
அவரை நகர்மன்ற துணைத் தலைவர் ஊராட்சி மன்றத் தலைவர் என உயரத்தில் வைத்து அழகு பார்த்தது நமது கழகம்
அந்த வகையில் இந்த இயக்கமானது ஏழை எளிய தொண்டனையும் உயர்ந்த நிலையில் ஏற்றி விடுகிறது.
மணிமுத்து அவர்களின் குடும்பத்தினருக்கு நமது கழகமானது எப்போதுமே உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார். இந்த விழாவில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.